Tuesday, April 12, 2016

உனை மட்டும் நினைத்து வாழ்வேன்..


துயரில்லா காதல் எங்குமில்லை
துயர் தராமல் இருந்தால் அது காதலில்லை
என்னையும் அறியாமல் - உன்னை
வேதனைப்படுத்திக் கொண்டு வாழ்கிறேன்

மண்ணிலே மறைந்திருக்கும் 
பல்லாயிரம் அற்பமான விடயங்கள் போல
உன் நெஞ்சிலே உள்ள வேதனைச்
சுவடுகளை மறைத்து விடு, மறந்து விடு

நீ தள்ளி போகும் ஒவ்வொரு வேளையும்
நம் காதலை விட உயரமான இடமிருந்தால்
அங்கு வைத்து என்னை தள்ளி விடு
என சொல்லத் தோன்றுதே

தேயும் இரவுகள் கூட உன்னை
தேடிப்போய் கெஞ்சுவதற்கும் கொஞ்சுவதற்கும்
அனுமதி தந்து அரைகூவல் விடுகிறது

அழியாத உன் நினைவுகளும்
ஆழமான உன் முகப்பதிவும் - முன்னின்று
என்னை கேள்வி கேட்டு கொல்லுதே

உன்னோடு வாழும் என் காதலை
நூற்றாண்டு காலம் சிந்தையில் சுமந்து
இருள் நிறைந்த மண்ணறையில் வாழ்வேன்

கனவிலும் துரோகம் நினைக்க மாட்டேன் - இனிமேல்
நினைவிலே நிதம் உனை மட்டும் நினைத்து வாழ்வேன்..

0 comments:

Post a Comment