Showing posts with label Home. Show all posts
Showing posts with label Home. Show all posts

Saturday, June 4, 2016

கண்ணீரினுள் என்னை தொலைக்கிறேன்...


நித்தமும் உன்னை நினைக்கிறேன்
என் நினைவுகள் உன்னில் இருக்குமோ
என்ற கேள்வியில் தான் எந்தன்
இமைகளை சற்று திறக்கிறேன்

காலம் அது கடந்து செல்கிறது
நம் காதல் அதில் பயணம் செய்கிறது
நாட்களும் உன்னை பிரித்துச் செல்கிறது
நினைவுகளாய் நம்மை நிலைக்கச் செய்கிறது

விண்ணில் பறந்து எங்கோ செல்கிறாய்
அங்கும் என் நிழல்கள் உன்னை தொடருமே
இனி வெறும் நிழலாய் மட்டும் தொடருவேன்
கண்ணீரினுள் என்னை தொலைக்கிறேன்

உன்னோடு சேர்ந்த நேரங்கள்
என் வாழ்வின் முதல் அனுபவம்
ஆசைகள் கடந்த வேளைகள் என்றும்
மறவாது வாழ்கின்ற வலிகள்

இனியவை மட்டும் பகிர்ந்திடாதே
என்னை மறந்து இருந்திடாதே
கனவுகள் என்றும் கானல்தான்
நம் வாழ்வு அதற்கின்று சான்றுதான்

உனக்குள் உயிர் தர வேண்டும்
என்றும் உனக்கு உயிராய் இருக்க வேண்டும்...

Tuesday, May 31, 2016

தூரம் அது தொலைந்தே போகட்டும்....


தூரங்கள் தெரியவில்லை காதலி
காதினில் ஒலிக்கையில்
நான் இன்று தேடினேன் அவளது
ஆனந்த புன்னகையை

விளைவுகள் சிறியவை  காதலில்
காத்திருப்பு பெரியது
ஓடாக தேயலாம் நாம் காதலால்
அது காடாக வளர்ந்திட

மின்னலாய் ஆனந்தம் அடிக்கடி
சிறு தூரலாய் கண்ணீர் துளி
மழையென பொழியும் முத்தங்கள்
எச்சிலை சுவைக்கும் தருனங்கள்

நடக்காத பல ஆசைகள் சோகத்தை
தந்திடும் வேளைகள்
கிறுக்கலாய் ஒரு சிறு கவிதையும்
நம் மனதை சொல்லிடும் அவளிடம்

செய்ததை மாற்றிட முடியாது
மாந்தர் அறிவினிலும் அதற்கிடம் கிடையாது
கேள்விகள் பல கோடி இருக்கலாம்
இறைவன் ஒருவனே பதிலையும் கொடுக்கலாம்

கோபம் என்மேல் கொள்ளாதே
கண்மணி உன் காதோரம் மூச்சுக்காற்றுப்பட
தூங்குவேன் - உன் மூச்சை என்னுள் வாங்குவேன்
தூரம் அது தொலைந்தே போகட்டும்...

Saturday, May 21, 2016

உன்னையே எதிர்பார்க்கிறேன்...


தடை என தோன்றும் கோபங்களும்
விடை என பகிரும் முத்தங்களும்
காதலில் நமக்கு மீதமடி
கண்ணீர் துளி மட்டும் வாழுதடி

கிழிஞ்சலாய் போன நினைவலைகள்
காயங்கள் தந்த வார்த்தைகள்
ஏமாற்றங்கள் எல்லாம் - என்றும்
பேசும் தனிமை மட்டும் துணையானதடி

வழுக்கியே விழுந்தேன் உன்னிடத்தில்
சிறிது தயக்கமே இன்றி உன் மடியில்
வாடியே இருப்பேன் உன் முகம்
காணாமல் ஒரு நாள் விடிந்தால்

சாலையில் போகும் பெண்களில்
உன் முகம் தேடியே பார்க்கிறேன்
காணாத முகங்களும் காண்கிறேன்
கண்மணி உன்னையே எதிர்பார்க்கிறேன்

கடிதமும் காதலைச் சொல்லலாம்
கண்ணீரும் பல வேதனை சொல்லலாம்
சொல்லாமல் வந்த காதலை
நாம் சுவர்க்கமாய் மாற்றிட வேண்டுமடி
உன்னில் என்னுயிர் இன்னொன்று விதைப்பேனடி

அமைதி மட்டும் சூழ ஆனந்தமாய்
உன்னருகில் வாழ்ந்திடுவேனடி உன் மனதின் மத்தியில்...


Saturday, May 14, 2016

நினைவாய் மட்டும் வாழ்கிறாள்...


மழை வெள்ளம் காண முன்
சிறு தூரலாய் நெஞ்சில் சந்தோஷம்
தருகிறாய் - தவித்திருக்கும் எனக்கு
உன் புன்னகையால் நிம்மதி தருகிறாய்

விடையே கிடைக்காத வினா ஒன்று
விடியலே இல்லா இருள் ஒன்று
உன் எண்ணங்கள் நிறைந்த மனம் ஒன்று
தனிமையில் துயில் நீங்கி விழிக்குதே

ஆயிரம் கேள்விகள் மனதில்
ஆனால் கோடி பதில்கள் உன்னில்
ஏனோ வானிலை போல் மாறுதோ
மனமும் உன் தடம் தேடி ஓடுதோ

தேயாத இரவுகள் தந்த காயாத கண்ணீரும்
மாறாத நினைவுகள் தந்த உன் அழகிய
புன்னகையும் - ஏன் ஒன்றாக கலந்து
ஓயாமல் இருளில் வாடச் செய்கிறது

நெருங்கி வந்து சில முத்தங்கள்
அது கானலாய் மறையும் காட்சிகள்
பார்வையில் வந்து செல்லுதே - உன்னை
பார்த்த இடத்தில் மீண்டும் தேடுதே

நீ அருகில் அமர்ந்த நொடி - இதயம்
துடித்த வேகம் உயிரே போகும்
அளவு வாங்கிய மூச்சுக் காற்று இன்றும்
நினைக்க தோன்றுதே, நினைவாய் மட்டும் வாழுதே

தயங்கிய சில தருனங்கள் - ஆனால்
தயங்காமல் வாழ்ந்த பல நினைவுகள்
நம்பிக்கை தந்த வார்த்தைகள் - ஏனோ 
நம்மிடம் இன்று இல்லாமல் போனது

என்னுள் என்றும் உன் நினைவுகள் - உதிரம்
என்னுள் ஓடும் வரை, விடியலின் திசை மாறும் வரை
இரு அலைகள் கட்டித்தழுவும் வரை
உயிராய், உணர்வாய் வாழ்ந்து கொண்டே இருக்கும்...

Sunday, May 8, 2016

புன்னகைத்தாள்..


உடலுக்குள் உறையுள் தந்தவள்
இருள் ஒன்றை அறையாய் தந்தவள்
தான் உண்ணும் உணவை எனக்கும் தந்தவள்
என்னை ஈன்று இந்த உலகுக்கு தந்தவள்

உயிர் போகும் வலி உணர்ந்தாள்
என் உடல் காற்றில் பட - மீண்டும்
உயிர்த்தெழுந்தாள் - என் முகம் பார்த்து
புன்னகைத்தாள், வேதனையை மறைத்தாள்

நான் வளர என் கனவுகள் வளர்ந்தன
என் கனவுகளோடு அவளும் - எனக்காய்
வளர்ந்தாள், உழைத்தாள் - என்னை
ஊர் போற்ற வேண்டும் என பாடுபட்டாள்

அவள் காலடி சொர்க்கம் - அதை
நான் தேடாத போதும் ஏனோ
எனக்காக எல்லாம் செய்கிறாள்
அவள் விழித்து என்னை தூங்கச் செய்கிறாள்

கனவான உலகில் உண்மை அன்பும்
கொடூர ஜனங்களின் மத்தியில் அன்பின்
உருவமுமாய் தெரிகிறாள் - தன்னையொரு
சேவகியாய் எண்ணி எனக்கு சேவை செய்கிறாள்

திருப்பிச் செலுத்த முடியா கடன்
உன் அன்பு அதில் ஒரு துளியேனும்
தந்து முடிக்க வேண்டும் - தாயே
உன்னை விட அதிகம் அன்பு காட்ட வேண்டும்


உன் மேல் அன்பு செலுத்த வருடத்தின்
ஒரு நாள் போதாது ஆனால் உன்னைப்
பெறுமைப்படுத்த இந்நாள் சமர்ப்பனம்

இனிய அன்னையர் தின நல் வாழ்த்துக்கள்..


Wednesday, May 4, 2016

இது என்ன மாயமோ..


நன்றி என்று சொல்லத்தோன்றும்
வேளைகளில் எல்லாம் - ஒரு
சிறிய முத்தமிட ஏக்கம் கொள்ளும்
அன்பான உள்ளங்களாய் இருக்கச் செய்யும்
காதல், இது என்ன மாயமோ..

வானவில் பார்க்கும் போதும்
வான் பிறை பார்க்கும் போதும்
என் முகம் பார்க்கும் போதும்
அவள் முகம் காட்டி என்னை ரசசிக்கச் செய்யும்
காதல், இது என்ன மாயமோ..

நேரிலே அவள் நின்றாலும் - நெருங்கிட
அச்சம் கொள்ளும் உள்ளம், அது
காரிருள் வேளையில் போர்வைக்குள் - காதோரம்
கைப்பேசி வைத்து வார்த்தைக்கு பஞ்சமே
இல்லாமல் மதி முழுக்க அவள் நினைவிலே பேசச் செய்யும்
காதல், இது என்ன மாயமோ..

கனவிலே ஒரு வாழ்க்கையும் - விழித்ததும்
அதன் ஏக்கமும் கொள்ளை எண்ணமும்
தந்துவிட்டு அடுத்த உயிர்கள்
இரண்டை இணைக்க அயராமல் ஓடும்
காதல், இது என்ன மாயமோ..

எத்தனை கோடியில் பெண்ணிருக்க
என் மனம் தேடி பிடித்த பெண்ணிவள்
உள்ளத்திலே என்னைப் பதித்து வைத்த
காதல், இது என்ன மாயமோ..

தொப்புல் கொடி இல்லாமல் தெடரும் பந்தம்
பெண்ணுக்கு தொப்புல் கொடி உறவைத் தரும் பந்தம்
காதல், இது என்ன மாயமோ...


Saturday, April 30, 2016

உந்தன் காதலை...


மீள முடியாத சோகங்களும்
திகட்டாத முத்தங்களும்
என்றும் அவள் புன்னகையும்
உயிர் பிரியும் வரை உள்ளிருக்கும்

தேடிக்கிடைத்த உறவு இன்று
வாட வைத்து போகும் போது
கண்ணீரும் அவளைப் பாடுதே
மனம் அவள் கால் தடத்தை தேடுதே

அவளை நேசித்த அளவு கூட - நான்
மென் காற்றை சுவாசிக்கவில்லை
காலம் என்னை கடந்து போக
அவள் காதலும் கடந்து போனது

உடல் மட்டும் இங்கே வாழ
உயிர் ஏன் அவள் தடம் தேடி ஓடுதோ
அறிவற்ற உயிருக்கு - அவள்
மட்டும் போதுமென்ற எண்ணமோ

காதல் தரும் இனிய நினைவுகளில்
சில ஏமாற்றங்கள் - இங்கு அவள்
காதல் மொத்தமும் ஏமாற்றமே

இனியும் இனியவை எதுவுமில்லை
எந்தன் வாழ்வில் - அவளின் சுவடுகளை
அழிக்க முயன்றும் தோற்கிறேன்

இரவல் தந்த உயிரை என்று
இறைவன் திருப்பிக் கொள்வான்
தினமும் அதயே எதிர்பார்க்கிறேன்

அன்பான உறவாய் அன்றாடம் நினைப்பேன்
உன்னையல்ல, உந்தன் காதலை...



Saturday, April 23, 2016

என் உயிரின் பாதியே...


என்றும் நனையாத மென் நிழலாய்
என்னுள் கரையாமல் கலந்து வாழும்
என் அழகிய காதலே, என் உயிரின் பாதியே

குறுஞ்செய்தியில் வந்த  வார்த்தைகள்
ஒவ்வொன்றாய் படிக்க படிக்க
அற்ப உயிர்  கலங்கி - வலி
நிறைந்து விழி வழிந்தோடுதே

அன்று ஆறுதல் தந்த உன் வார்தைகள்
இன்று உன் மடி சேர்ந்து - ஆறுதல்
பெற ஏங்கும் குழந்தையாய் மாற்றுதே
என்னை நான் வெறுக்கும் படியாக்குதே

தோற்றுப்போன உறவாய் இருந்தாலும்
பரவாயில்லை - நான் துரோகம் செய்த
உறவாய் மாறிவிட்டேனே

என் ஆசைகள் விரித்த கிளைகள்
உன் இதயத்தை கிழித்து விட்டன- ஆசைகளையும்
என்னையும் மண்ணித்துக் கொள்

காலத்தால் ஒன்றான நம் உயிருக்கு
ஆறுதலாய் ஒரு வார்த்தை
நிம்மதியாய் ஒரு தூக்கம் வேண்டுமே

இனி எத்தனை காலம் சென்றாலும் - உன்
கரம் மட்டும் பற்றிப்பிடித்து கடைசிவரை வாழ்வேன்..


Monday, April 18, 2016

ஒரு உயிராக...


துணை நீ என மட்டும் அறிந்து
துயில் கொள்கிறேன்
காலை உன் நினைவால் மீண்டும்
விழித்திடுவேன் என்ற உண்மையில்

உன் நெருக்கமான எண்ணங்கள் - என்
நினைவலைகளை சேதம் செய்யுதடி
வீணான ஆசைகளை சுமந்த - என்
இதயத்தை நீ சுமக்கிறாய் காதலால்

உன் அழகிய இதயம் சென்று
பார்த்து அதனுள் வாழ்ந்த எனக்கு
உன்னை வேதனை செய்யும்
கொடூர எண்ணங்கள் எவன் தந்தானோ

காலம் தந்ந என் இன்னொரு தாய்
உன்னை காலமும் தாய் போல
சுமக்க வேண்டும் - சேயாய்
உன் மடி வாழ்ந்து மடிய வேண்டும்

வேண்டிக்கொள்ள மட்டும் முடிந்த
இவ்வுலகில் - என்னை
தாங்கிக் கொள்ளும் உன்னை
கலங்காமல் கண்ணீர் கரையாமல் 
காத்திடுவேன் ஆண் உருவில் ஒரு தாயாக

மாற்றம் தந்த உன் காதலோடு
வாழ்ந்து காட்டுவோம் மாற்றமில்ல உறவாக, ஒரு உயிராக...

Tuesday, April 12, 2016

உனை மட்டும் நினைத்து வாழ்வேன்..


துயரில்லா காதல் எங்குமில்லை
துயர் தராமல் இருந்தால் அது காதலில்லை
என்னையும் அறியாமல் - உன்னை
வேதனைப்படுத்திக் கொண்டு வாழ்கிறேன்

மண்ணிலே மறைந்திருக்கும் 
பல்லாயிரம் அற்பமான விடயங்கள் போல
உன் நெஞ்சிலே உள்ள வேதனைச்
சுவடுகளை மறைத்து விடு, மறந்து விடு

நீ தள்ளி போகும் ஒவ்வொரு வேளையும்
நம் காதலை விட உயரமான இடமிருந்தால்
அங்கு வைத்து என்னை தள்ளி விடு
என சொல்லத் தோன்றுதே

தேயும் இரவுகள் கூட உன்னை
தேடிப்போய் கெஞ்சுவதற்கும் கொஞ்சுவதற்கும்
அனுமதி தந்து அரைகூவல் விடுகிறது

அழியாத உன் நினைவுகளும்
ஆழமான உன் முகப்பதிவும் - முன்னின்று
என்னை கேள்வி கேட்டு கொல்லுதே

உன்னோடு வாழும் என் காதலை
நூற்றாண்டு காலம் சிந்தையில் சுமந்து
இருள் நிறைந்த மண்ணறையில் வாழ்வேன்

கனவிலும் துரோகம் நினைக்க மாட்டேன் - இனிமேல்
நினைவிலே நிதம் உனை மட்டும் நினைத்து வாழ்வேன்..

Saturday, April 2, 2016

தனிமையில் ஒரு தருனத்தில்...


நிறம் காட்டும் ஒளியில்
என் வரம் பார்த்தேன் - பெண்ணவள்
கொஞ்சிப் பேசும் அழகில்
என் நெஞ்சம் உரை பனி ஆகுதே

காலமும் அவள் முகம்
என் மனதில் தோன்றிட - பெண்ணவள்
காலடி தேடியே அலைகிறேன்
அச்சத்தில் திசை மாறி திரும்பினேன்

தனிமையில் ஒரு தருனத்தில்
ஒளியில் அவள் முகம் கண்டேன்
தோன்றிய எண்ணங்கள் கோடி
வியர்வையும் நனைத்தது உடலெங்கும் ஓடி

உணர்வற்ற மரமாக அசைவின்றி
நின்றிருந்தேன் - அவள் கடந்து
செல்லும் காற்று என்னை தொடும்  வரை

இனம் புரியாதொரு தாகம் என்னுள்
தண்ணீருக்கா இல்லை
என் காதல் எண்ணங்களுக்கா தெரியவில்லை

காதலிக்கிறேன் உன்னை
கரம் பிடிக்க துடிக்கும் குழந்தை போல...

Wednesday, March 30, 2016

சிறு ஈரத்துடன்...


என்னை நீ ஒரு கணம்
நினைக்கும் போது புதிதாய் பிறக்கிறேன்
என்னை நீ மறு கணம்
மறக்கும் போது ஏனோ இறக்கிறேன்

கர்வம் கொண்ட காதல் அள்ளித்தந்த
தேவதை உன்னை தொலைத்து விட்டு
காலமெல்லாம் தேய்ந்து போக
நானும் கரைகிறேன்

கண்ட கணமே கட்டியனைக்க
துடித்த கரத்தை கட்டிப்போட்டு விட்டதே
உன் மேல் இருந்த பொய்க்கோபம்

காத்திருக்கும் எனக்கு - காதல்
தேவதையின் முகத்தை காட்டுமோ
இல்லை உயிர் பிரியும் வரை ஏக்கம் மட்டுமோ

காத்திருப்பேன் காதலுடன்
கண்ணிமையில் சிறு ஈரத்துடன்...

Friday, March 25, 2016

அவள்...

வேதனைகளை மட்டும் சுமந்து கொண்டிருந்த
என் இதயத்திற்கு
சிரிக்கவும் கற்றுந்தந்தவள் - அவள்

தனிமையில் நடந்த கால்களோடு
ஜோடியாய் நடந்தவள் - அவள்

கனவுகளை மட்டும் சுமந்து கொண்டிருந்த
என் இதயத்திற்கு
சிறகடிக்கவும் கற்றுத்தந்தவள் - அவள்

தேவைகளோடு வாழ்ந்த இதயத்தில்
தேவதையாய் வந்தவள் - அவள்

பல தேவைகள் நிறைந்த உலகில்
என் தேவதையை மட்டும்
தேவையாக்கிக் கொண்டேன்

நிரந்தர உறவுமில்லை
நிரந்தர உருவமுமில்லை
நிரந்தர அன்பு மட்டும் எனக்காக
அவள் மனதில்
என் உயிர் - அவள்