இருள் ஒன்றை அறையாய் தந்தவள்
தான் உண்ணும் உணவை எனக்கும் தந்தவள்
என்னை ஈன்று இந்த உலகுக்கு தந்தவள்
உயிர் போகும் வலி உணர்ந்தாள்
என் உடல் காற்றில் பட - மீண்டும்
உயிர்த்தெழுந்தாள் - என் முகம் பார்த்து
புன்னகைத்தாள், வேதனையை மறைத்தாள்
நான் வளர என் கனவுகள் வளர்ந்தன
என் கனவுகளோடு அவளும் - எனக்காய்
வளர்ந்தாள், உழைத்தாள் - என்னை
ஊர் போற்ற வேண்டும் என பாடுபட்டாள்
அவள் காலடி சொர்க்கம் - அதை
நான் தேடாத போதும் ஏனோ
எனக்காக எல்லாம் செய்கிறாள்
அவள் விழித்து என்னை தூங்கச் செய்கிறாள்
கனவான உலகில் உண்மை அன்பும்
கொடூர ஜனங்களின் மத்தியில் அன்பின்
உருவமுமாய் தெரிகிறாள் - தன்னையொரு
சேவகியாய் எண்ணி எனக்கு சேவை செய்கிறாள்
திருப்பிச் செலுத்த முடியா கடன்
உன் அன்பு அதில் ஒரு துளியேனும்
தந்து முடிக்க வேண்டும் - தாயே
உன்னை விட அதிகம் அன்பு காட்ட வேண்டும்
உன் மேல் அன்பு செலுத்த வருடத்தின்
ஒரு நாள் போதாது ஆனால் உன்னைப்
பெறுமைப்படுத்த இந்நாள் சமர்ப்பனம்
இனிய அன்னையர் தின நல் வாழ்த்துக்கள்..

0 comments:
Post a Comment